பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் பெயரை பயன்படுத்தி மத முறுகலை ஏற்படுத்த முயன்ற பெண் கைது!

201808280051303355 Near the pithor Drug pills The arrested woman was arrested SECVPF
201808280051303355 Near the pithor Drug pills The arrested woman was arrested SECVPF

பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் பெயரை பயன்படுத்தி மத முறுகலை ஏற்படுத்தும் வண்ணம் சமூக ஊடகங்களில் காணொளியை பதிவேற்றிய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 43 வயதான பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இந் நிலையில் சந்தேக நபர் நாளைய தினம் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முன்னதாக கத்தோலிக்க திருச்சபை பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் உவத்தை களங்கப்படுத்த முயன்றதை கண்டித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.