20 கிலோ நிறையுடைய கடலாமை இறைச்சியுடன் மூவர் ​கைது!

image 2020 10 18 114944
image 2020 10 18 114944

நேற்று (17.10.2020) காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற தொடுவாவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் மாரவில- தொடுவாவ கரையோரப் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகளுடன் மாரவில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து 20 கிலோ நிறையுடைய கடலாமை இறைச்சி , இரண்டு கடலாமை ஓடுகள், தராசு மற்றும் கத்திகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நீண்ட நாட்களாக கடலாமைகளைப் பிடித்து அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் இரகசியமாக இறைச்சிக்காக வெட்டப்பட்ட கடலாமைகள் விற்பனை செய்யும் நோக்குடன் கொண்டு வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மாரவில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.