விசனம் தெரிவித்துள்ள பொது மக்கள்!

screenshot2020 10 18 21 39 41
screenshot2020 10 18 21 39 41

அரசாங்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட போதும் வவுனியா சதொசாவில் அதனைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசாங்கத்தினால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய், சீனி ஒரு கிலோ 85 ரூபாய், பெரிய மீன் ரின் ஒன்று 200 ரூபாய் என கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய வவுனியாவில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு மக்கள் செல்கின்ற போதும், அங்கு குறித்த கட்டுப்பாட்டு விலையில் மீன் ரின் மட்டுமே உள்ளது.

சீனி மற்றும் பெரிய வெங்காயம் என்பன இல்லை என தெரிவிக்கின்றார்கள். எனவே, கட்டுப்பாட்டு விலை அறிவித்ததும் பொருட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன்,

இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி கட்டுப்பாட்டு விலையில் பொருட்களைப் பெறக் கூடிய நிலையை உருவாக்கி தர வேண்டும் எனக் கோரியுள்ளனர்.