பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து ஆராயும் குழு!

FB IMG 1603357888678
FB IMG 1603357888678

எமது நாட்டில் இரண்டாம் கட்டமாக அதிகளவில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் வழிகாட்டல் காரைதீவு பிரதேச குழுவின் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.   

இதன் போது தற்போது நாட்டில், குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று நிலைகளில் காரைதீவு , மாளிகைக்காடு மீன் வாடிகளின் சமகால நிலைமைகள் தொடர்பிலும், எதிர்வரும் கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. அத்துடன்  இக்கூட்டத்தில் கொரோனாவை காரைதீவு பிரதேசத்தில் கட்டுப்படுத்தல் தொடர்பிலும் இக்குழுவினால் பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். ஜீவராணி,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத், காரைதீவு உதவி பிரதேச செயலாளர்  எஸ்.பார்த்திபன்,பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1603357875373
FB IMG 1603357881703