வாழைச்சேனை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கொரோணா பாதுபாப்பு அறித்தல்!

01 2 2 1
01 2 2 1

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளில் நடமாட கூடாது எனவும், நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்று வாழைச்சேனை காவல்துறை ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

01 7 2
01 7 2

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் பதினொரு நபருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

01 6 2
01 6 2

அந்த வகையில் வாழைச்சேனை காவல்துறை பகுதிகளில் வசிக்கும் ஏனைய பொதுமக்களிடம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஒலிபெருக்கி மூலம்காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

01 3 2
01 3 2

வாழைச்சேனை காவல்துறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ள நிலையில் சட்டத்தினை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளார்.

01 4 2
01 4 2

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது அதையும் மீறி சிலர் செயற்படுவதாகவும், குறிப்பாக இளைஞர்கள் கட்டுக்கடங்காமல் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி சுற்றித் திரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

01 3 2 1
01 3 2 1

ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் திரிபவர்களை கைது செய்து கொரோணா வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி தண்டனை வழங்கப்படும் என்றும், பிரதேச மக்களின் நன்மை கருதி அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வாழைச்சேனை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

01 1 3
01 1 3

வாழைச்சேனை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்ற நிலையில் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் காணப்படுவதுடன், வீதிகளில் வெறிச்சோடி காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.