கொரோணா தொற்றாளர்களின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது பிசீஆர் பரிசோதனை!

01 6 3
01 6 3

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுஅவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

01 10 1
01 10 1

கொழும்பு பேலியகொடை மீன் சந்தைக்கு வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மீன் கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களில் பதினொரு பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தியதையடுத்து குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

01 9 2
01 9 2

இதன் காரணமாக கொரோணா தொற்று உள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் பி.சி.ஆர். மாதிரிகளும் பெறும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

01 3 3
01 3 3

குறித்த கொரோணா தொற்று உள்ளவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஐம்பது பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்இ அதன் முடிவுகள் வந்த பின்னரே குறித்த நபர்களுக்கு கொவிட் 19 உள்ளதாஇ இல்லையா என்று உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

01 1 4
01 1 4

அத்தோடு கொரோணா தொற்று உள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர்கள் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான விபரங்கள் பொலிஸாரினால் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜெயசுந்தர தெரிவித்தார்.

01 2 3
01 2 3