ஓமான் எயார் இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்கான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஓமான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஓமான் எயார் தனது சர்வதேச விமான சேவைகளை இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்கு மீண்டும் தொடங்கவுள்ளது.

ஓமான் எயார் வாரத்துக்கு இரு விமான சேவைகளை இலங்கை, குவைத், பஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கு இயக்கவுள்ளது.

கொரோனா பரவுதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விமானப் பயணங்களை நிறுத்திய ஓமான், ஏழு மாதங்களுக்குப்பின் கடந்த ஒக்டோபர் 1 முதல் சர்வதேச விமான பயணங்களை மீள ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.