சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் வெளிப் பிரதேச வியாபரிகள் தொற்று நீக்கி தெளித்த பின் உட்செல்ல அனுமதி!.

IMG 20201026 WA0006
IMG 20201026 WA0006

அம்பாறை சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் உள் நுழையும் வெளிப் பிரதேச வியாபாரிககள் அவர்களது வாகனங்களையும் பதிவு செய்வதோடு தொற்று நீக்கி கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதது.

IMG 20201026 WA0006 1
IMG 20201026 WA0006 1

சம்மாந்துறை கொரோனா வைரஸ் தடுப்பு வழிநடாத்தல் குழுக் கூட்ட எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாகவே, பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கொரோனா தொற்று பரவலை; தடுக்கும் நடவடிக்கையின் கீழ் பிரதேசத்துக்குள் உள்நுளையும் வெளிப் பிரதேச வியாபாரிகள் அவர்களது வாகனங்கள் பதிவு செய்வதுடன் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து தொற்று நீக்கி கிருமிநாசினிகளை தெளித்து சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என உறுதிப்படுத்தி திகதியிட்ட வியாபார அனுமதி அட்டை ‘ ஒன்றினை வழங்கும் வருகின்றனர்.

IMG 20201026 WA0007 1
IMG 20201026 WA0007 1

இந்த நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் சம்மாந்துறை பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளான நெல்லுப்பிடிச் சந்தி , வங்களாவடி , வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 4 இடங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

IMG 20201026 WA0008 1
IMG 20201026 WA0008 1