ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

4 jj 9
4 jj 9

தபால் மற்றும் தொலைபேசி மூலம் ஜனாதிபதி அலுவலகத்தை அணுகுவதற்கான வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளுடன் சேவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தபால் மற்றும் தொலைபேசி மூலம் ஜனாதிபதி அலுவலகத்தை அணுகுவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பிரிவை, 011 435 45 50 மற்றும் 011 23 54 550 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும், 011 234 88 55 எனும் ஃபெக்ஸ் இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் குறைகேள் அதிகாரி அலுவலகத்தை 011 233 80 73 எனும் இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும், ஜனாதிபதி நிதியத்தை 011 23 54 354 மற்றும் 4800, 4814, 4815 மற்றும் 4818 ஆகிய நீடிப்பு இலக்கங்களின் மூலமும் அணுக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.