அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் புதிய தேசிய திட்டம் நாளை ஆரம்பம்….

1603729032 gramiya 2
1603729032 gramiya 2

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான திட்டம் நாளை (27) வட-மத்திய மாகாண சபை மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய,

  1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு
  2. வாழ்வாதார மேம்பாட்டு குழு
  3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு
  4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு

என்றவாறு இராஜாங்க அமைச்சை பிரதானமாக நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளதுடன், அதில் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் ஆகியோர் நாளை அநுராதபுரத்தில் மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை செயற்படுத்தும்போது மாகாண மட்ட, மாவட்ட மட்ட, பிரதேச மட்ட மற்றும் கிராமிய மட்ட அமைச்சுக்களில் வேலைத்திட்டங்களை தயார்ப்படுத்தி அமைச்சுக்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பொருளாதாரத்தை மேம்படுத்துகையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், மாவட்ட மட்டத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், தேசிய பொருளாதாரம் போன்றே கிராமிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதமர் அலுவலகத்தினால் இந்த வேலைத்திட்டம் ஒருங்கிணைக்கப்படுவதுடன், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றனர்.