இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் தனிமைப்படுத்தலில்!

Gampaha District Agalawatta PS Palindanuwara PS Declared as Isolated Area 2
Gampaha District Agalawatta PS Palindanuwara PS Declared as Isolated Area 2

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, மல்வல எம்புல்தெனிய பகுதியில், மீன் வியாபாரி ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட சிரிபாகம, கிலிமலே வடக்கு, கிலிமலே தெற்கு, கெடவல மற்றும் மாபலான ஆகிய கிராமங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த பகுதிகளில் இன்று முதல் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மல்வல ஒலுகல சந்தி வரையான வீதி, கனேகல்ல குறுவிட்ட வீதி மற்றும் ரத்துருகல ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.