ஊரடங்கு விதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய 20பேர் கைது!

download 15 2
download 15 2

கம்பஹா மாவட்டத்தில் அத்தியவசிய பொருட் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை, முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக கம்பஹா மாவட்டத்தின் 37காவல்துறை பிரிவுகளுக்கு இன்றைய தினம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, சுகாதார நியமங்கள் மற்றும் ஊரடங்கு சட்டவிதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்பது வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.