திருகோணமலையிலும் அதிகரித்தது கொரோனாதொற்று : பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் !

ISRAEL1588680192346
ISRAEL1588680192346

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டு திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை, மூதூர் நெய்தல் நகர் பகுதியில் 2 பேருக்கும், இக்பால் நகர் பகுதியில் ஒருவருக்கும் நேற்று (27)கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் திருகோணமலை மாவட்ட சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு முன்னதாக திருகோணமலையில் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கே முதன் முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் திருகோணமலை சுமேதகம பகுதியில் ஒருவருக்கும், அபயபுர பகுதியில் ஒருவருக்கும், 5ஆம் கட்டைப் பகுதியில் ஒருவருக்கும், தம்பலகாமம் பகுதியில் ஒருவருக்கும், கொழும்பு என்.டி.பி. வங்கி பணியாளர் ஒருவருக்கும் என ஆறு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவசிய தேவைகள் இன்றி மூதூர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வெளியிடங்களைச் சேர்ந்த மக்களுக்குபி பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.