மஸ்கெலியா மற்றும் சாமிமலை நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை!

DSC00508 720x450 1
DSC00508 720x450 1

மஸ்கெலிய மற்றும் சாமிமலை நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைத்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடைகளை மூடூவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்தார்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்காமல் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் இரண்டு நகரங்களின்வர்த்தக நிலையங்களை மூடி வைத்து கொவிட் பெரும்பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாமிமலை மற்றும் மஸ்கெலிய நகரங்களின் வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார வைத்திய அதிகாரிகளின் இணக்கப்பாட்டுடன் பிரதேச சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனினும், ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் நகரங்களின் பிரதான இடங்கள் தொற்றுநீக்கம் செய்யப்படவுள்ளது.

அதேவேளை, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும் எனவும்,

வெளியில் இருந்து வருபவர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்களை வழங்கவேண்டும் எனவும் பிரதேச சபை தலைவி தெரிவித்தார்.