மேல் மாகாணத்தில் விசேட காவற்துறை வீதி தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை

ajith2
ajith2

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுப்படுபவர்களை தவிர்ந்த வேறு எவருக்கும் மேல்மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கு அல்லது வெளியேருவதற்கு அனுமதி இல்லை என்று காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதிகாவற்துறை அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

நீர் விநியோகம், மின்சாரம், ஊடகம், சுகாதாரம், மருந்து, துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றிற்கான பணிகளே அத்தியவசிய கடமைகளாக அடையளப்படுத்தப்பட்டுள்ளன. என்றும் அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து இடங்களிலும் விசேட காவற்துறை வீதி தடைகளை ஏற்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இதில் அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்கியிருப்பதாகவும் கூறினார்.