தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

குறித்த பெண் கண்டியில் இருந்து கிரிபத்கொடை பகுதிக்கு வந்து பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் தமது உறவினருடன் ஒரு வாரக்காலம் தங்கியிருந்து பின்னர் குடாவெல பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.