வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதிக்கு சென்ற விஷேட அதிரடி படையினர் முதிரை கடத்தலை முறியடித்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கப் ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றபட்ட முதிரை குற்றிகள், வாகனமும் வவுனியா பூவரசங்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.