நாட்டு மக்களுக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தல்!

maxresdefault 2 1
maxresdefault 2 1

கொரோனா தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை, வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதில் தாமதம் ஏற்பட்டால், சுகாதார மேம்பாட்டு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் 1999 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு, இது தொடர்பில் அறிவிக்குமாறு, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மூன்று மொழிகளிலும் இயங்கும் குறித்த தொலைபேசி சேவை, 24 மணித்தியாலமும் செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களை, மிக விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது அதிக தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள காரணத்தினால், தாமதம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைளில், பொது சுகாதார பரிசோதகர்களின் குறைபாடுகள் இருக்குமெனில், அது தொடர்பில் கண்டறிவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை வைத்திசாலைக்கு அனுப்பும் வரை, வீட்டில் உள்ள ஏனைய நபர்கள், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது