அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை !

நாட்டை முழுமையாக முடக்கக் கூடாது எனில், அதிக அபாயமுள்ள பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுபடுத்தப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்றில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 80 வீதம் வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமெனில், அதிக ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே பெறப்பட்ட சுமார் 20 ஆயிரம் PCR பரிசோதனை மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், அவற்றை விரைவாக பரிசோதனைக்கு உட்படுத்தாத பட்சத்தில், உரிய பெறுபேறுகளைப் பெற்றுக் முடியாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் சீரான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தாம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்