சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிக்க விசேட புலனாய்வு துறை

ajith2
ajith2

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறுகின்றார்களா? என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ள புலனாய்வு பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சிலர் அதனை மீறி வெளியில் நடமாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.