வவுனியாவில் உணவகங்களுக்கு அமுல்படுத்தப்படும் புதிய நடைமுறை!

IMG20181129135900
IMG20181129135900

சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர் பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுகின்றது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகிக்க வேண்டாமென உணவக உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் எமது சுகாதார பிரிவினர் நாளையதினம் தொடக்கம் சோதனை நடவடிக்கை ஈடுபடுவார்கள் அச்சமயத்தில் இதனை மீறி செயற்படும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.