தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் ஊரடங்கைத் தளர்த்துவதா? – அரசு மீது சஜித் அணி பாய்ச்சல்

download 2 6
download 2 6

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கைத் தளர்த்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயத்தில் அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புகளும் நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசை நம்பியிருக்காமல் மக்கள் தங்கள் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்களின் மீது சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

பொதுமக்களுக்குச் சலுகைகளை வழங்குமாறும் அரசிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்