காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க தீர்மானம்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஆற்றிய அளப்பெரிய சேவையைப் பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காவல்துறை தொடர்ந்தும் தமது கடமைகளை நிறைவேற்றுவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கர்ப்பிணியாகியுள்ள பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய பெண் காவல்துறை உத்தியோத்தர்களுக்கு வீடுகளிலேயே தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.