கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்சல் சுமங்கல டயஸ் நியமனம்!

air force commander umangala dayas 300x200 1
air force commander umangala dayas 300x200 1

கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கனடா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் இன்று (09)நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அஹமட்.ஏ.ஜவாட் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், தர்ஷன பெரேரா சுவீடனுக்கான இலங்கைத் தூதுவராகவும், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான இலங்கைத் தூதுவராகவும், எஸ்.டி.கே.சேமசிங்ஹ போலாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், சி.ஈ.சமிந்த.ஐ.கொலன்னே தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராகவும், எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் எயார் மார்சல் சுமங்கல டயஸ் விமானப்படையின் 17வது தளபதி இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷாபொறுப்பேற்றதன் பின்னர் சிவில்நிர்வாகங்களுக்கு இராணுவத்தினரை பொறுப்பாக நியமிக்கின்றமை அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது