மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்

7
7

தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவு செய்த மேலும் 38 பேர் இன்று(10) தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் இதுவரை 64,075 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நிறைவு செய்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 27 நிலையங்களில் 2,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றாளர்கள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்படமாட்டார்கள் என்றும் அதற்கு பதிலாக வீட்டில் தனிமைப்படுவார்கள் என்றும் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தது.

அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.