நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன – பாலசூரிய

download 1 13
download 1 13

நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் நிலையை அடைந்துள்ளன என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொத்தணிகளுடன் தொடர்பில்லாத நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும்போதே சமூகபரவல் ஆரம்பமாகின்றது என தெரிவித்துள்ள பாலசூரிய, அதிகாரிகள் அவ்வாறான நோயாளிகள் இனம் காணப்படவில்லை என தெரிவித்தாலும் நாங்கள் நோய் தொற்று எங்கிருந்து பரவியது என்பது தெரியாத நோயாளிகளை எதிர்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலில் இவ்வாறான நோயாளர்களை அடையாளம் கண்டுள்ளோம் என பொதுசுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோய்தொற்று எங்கிருந்து பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாத நோயாளர்கள் அல்லது ஏற்கனவே காணப்படும் கொத்தணியுடன் தொடர்பற்ற நோயாளர்கள் இனம் காணப்பட்டால் மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.