வாகன விபத்தில் ஒருவர் பலி!

accident 625x300 1529324118495
accident 625x300 1529324118495

மட்டக்களப்பில் அம்பிளாந்துறை – வெல்லாவெளி வீதியில் தாமரைப்பூசந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.

உந்துருளியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார தூண் ஒன்றில் மோதி இன்று முற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மட்டக்களப்பு – மண்டூர் பலாச்சோலையை சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.

உந்துருளியில் மேலும் ஒருவர் பயணித்துள்ளதுடன் விபத்தின் பின்னர் அவரை காணவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.