நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

images 5 1
images 5 1

தற்பொழுது அதிகரித்து வரும் கொரோனாநோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி, பூசா சிறைச்சாலைகளிலிருந்து நேற்றைய தினம் 44 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பூசா சிறையில் 25 அதிகாரிள் மற்றும் 107 கைதிகள் மீது வெள்ளிக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த முடிவுகளிலேயே 44 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அனைவரும் கந்தகாடு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பூசா சிறைச்சாலையில் ஏனைய கைதிகள் மற்றும் அதிகாரிகளையும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வெலிகட, போகம்பர, பூசா, மாத்தறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளிலிலும் கொரோனா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.