பசில் ராஜபக்ச நிச்சயமாக நாடாளுமன்றத்திற்குள் வரவேண்டும் -உதயராசா!

IMG 8159
IMG 8159

இன்று நம் நாடானது கடும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது, அந்நிலையை நிவர்த்தி செய்வதற்கு பசில் ராஜபக்ச அவர்களின் தந்திரோபாயமானதும் மிகநுனுக்கமானதுமான பொருளாதார கொள்கைகள் நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையானதொன்று , இதற்கு ஆதரவாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மகஜரும் வழங்கியுள்ளனர்.

எனவே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ச அவர்கள் நிச்சயமாக நாடாளுமன்றத்திற்குள் வரவேண்டும் என்பதுடன், மீண்டும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில், கடந்த 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் நம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கெளரவ பசில் ராஜபக்ச அவர்களின் ஆக்கபூர்வமான பொருளாதார கொள்கைகளை கொண்டு நாட்டில் பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார்.

நாடு முழுவதும் புதிய கைத்தொழில் பேட்டைகள், ஆடை தொழிற்சாலைகள், யுத்த காலத்தில் பல வருடங்காளக தடைபட்டிருந்த தெற்கிலிருந்து யாழ்-மன்னார் வரையிலான ரயில் பயணம் மறுசீரமைப்பு மற்றும் இலங்கையில் எந்த பகுதிகளுக்கும் பயணிக்க கூடிய பாரிய வீதி அபிவிருத்திகள் என பல அபிவிருத்திகளை பசில் ராஜபக்ச அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்திகளை வகைபடுத்தி கூறிக்கொண்டே செல்லமுடியும்.

குறிப்பாக இறுதி யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு வாழ் மக்களுக்காக வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என புதிய திட்டங்களை உருவாக்கி அதனூடாக வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்திகளை வழங்கி வைத்திருந்தார் என்பதுடன் படித்த இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் அத்துடன் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் திவிநெகும என்ற ஓர் புதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்து பல்லாயிரக்கணக்கானோரின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தியிருந்தார்

எனவே இவ்வாறான சிறந்த சிந்தனையுடைய, நாட்டிலும் நாட்டு மக்களிலும் அதிக விருப்பம் கொண்ட பசில் ராஜபக்ச அவர்களை 20வது திருத்த சட்டமூலத்தின் நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினராக்கி பொருளாதார அபிவிருத்தி அமைச்சை வழங்கி நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் தானும் கேட்டுக்கொள்வதாகவும் சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.