முல்லைத்தீவு பகுதியிலுள்ள பல மின்விளக்குகள் ஒளிரவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

received 787609492093131
received 787609492093131

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முல்லைத்தீவு நகர் பகுதியில் பல இலட்சம் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டு பொருத்தப்பட்ட வீதி விளக்குகள் ஒளிராத நிலையில் நகரப் பகுதி இருண்ட நிலையில் காணப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

குறிப்பாக முல்லைத்தீவு நகரத்தில் காணப்படுகின்ற சுற்றுவட்டத்தில் பூட்டப்பட்ட மின் விளக்கு கூட ஒளிரவில்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரதேச சபை வாசலுக்கு முன்பாக இருக்கின்ற சுற்றுவட்டத்தில் உள்ள மின் விளக்கை கூட கவனிக்க முடியாத நிலையில் பிரதேசசபை இருக்கின்றதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பல இலட்சம் ரூபா நிதியை செலவளித்து வீதி விளக்குகள் பொருத்தும் திட்டங்களை மேற்கொண்டாலும் அது உரிய பராமரிப்பின்றி அரச நிதிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் மக்கள் இவ்வாறு வீதி விளக்குகள் பூட்டப்பட்ட நிலையிலேயே வீதிகள் அனைத்தும் இருட்டாக காணப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

குறிப்பாக முல்லைத்தீவு நகரத்திலிருந்து கடற்கரைக்கு செல்கின்ற முல்லைத்தீவு கடற்கரை வீதியில் 14 மின் விளக்குகள் போடப்பட்டபோதும் அதில் 2 மின்விளக்குகள் மாத்திரமே ஒளிர்கின்ற நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல லட்சம் ரூபாய்களை செலவு செய்த போதும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக நகர் பகுதி இருண்டு காணப்படுகின்றமை வேதனை அளிப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.