ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை-பிரதமர்!

poli
poli

2021ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க நிதியமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிந்தார்.

ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் கவனித்துள்ளது. பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒற்றை பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை தடை செய்வது சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த முறையில் கழிவுகளை நிர்வகிப்பதை உறுதி செய்யும் எனவும் பிரதமர் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.