அனைத்து மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்க தீர்மானம்

1568033620 Herath to fill vacant UPFA MP seat 2
1568033620 Herath to fill vacant UPFA MP seat 2

நாட்டின் சகல மாகாணங்களிலும் எதிர்வரும் சில ஆண்டுகளில் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டி கெட்டம்பே கால்நடை மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மத்திய மாகாணப் பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் சகல பகுதிகளிலும், கால்நடை வைத்திய சேவைகள் காணப்பட்டாலும், மக்களுக்கு சலுகைவிலையில், முழுமையான உத்தரவாதத்துடன் கூடிய சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான அரச கால்நடை வைத்தியசாலைக்கான பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நாட்டின் சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.