கிழக்கு மாகாணசபையை பொதுஜன பெரமுன கைப்பற்றும் – கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 5

கிழக்கு மாகாணசபையை எமது கட்சி கைப்பற்றும் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

இன்று பிரதமர் மகிந்த ராஜபஷ; 75 வது பிறந்ததினத்தையிட்டு மட்டக்களப்பு பொதுஜன பெரமுனை கட்சியிள் மாவட்ட காரியாலயத்தில் கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் புதன்கிழமை (18) கேக்வெட்டி பிரதமரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சியின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபஷவின் 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாட பல ஏற்பாடுகள் செய்திருந்தோம் இருந்த போதும் கொரோன தொற்று காரணமாக அவருக்கு ஆசிவேண்டி ஆலயங்களில் பூஜை வழிபாடுகளுடன் கேக்வெட்டி கொண்டாடினோம்

பிரதமரின் பிறந்த தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம் அவர் செய்வதைத்தான் சொல்பர் சொல்பதைதான் செய்வார் எனவே எமது பிரதமரின் காலத்தில் தமிழ் மக்களுக்கு நல்ல விடிவுகாலம் கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்புகின்றனர் அவ்வாறே மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்களும் அவர் சொல்வதை செய்யக்கூடியவர் என நம்புகின்றனர்

எனவே தமிழ் மக்களுக்கு ஒரு சுமூகமான தீர்வு ஒன்றை பிரதமரின் காலத்தில் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது எனவே தமிழ் மக்கள் எமது கட்சியுடன் சேர்ந்து செயற்படவேண்டும் அதேவேளை கிழக்கு மாகாணசபையை எமது கட்சி கைப்பற்றும் அதன் ஊடாக மட்டக்களப்பிற்கு நிறைய அபிவிருத்திகள் செய்யமுடியம்.

கிழக்கின் உதயம் என உருவாக்கியவர் எமது கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ எனவே அவர் பாராளுமன்றம் சென்றால் தான் மட்டக்களப்பிற்கு கட்சியின் நேரடி அபிவித்தி கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர் எனவேபசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கும்படி மட்டக்களப்பு மக்கள்சார்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்

மக்கள் ஆளும் கட்சியில் நம்பிக்கைவைத்து வரலாற்றில் ஆளும்கட்சி சார்பான கட்சிகளுக்கு ஒரு இலச்சத்துக்குமேல் வாக்களித்துள்ளனர் பசில் ராஜபக்ஷ கடந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பிற்கு அபிவிருத்திகளை செய்தவர் என்றதை நிறுத்தி மக்கள் வாக்களித்தனர்

அதேவேளை மீன்பிடி . விவசாயம், போன்ற சகல துறைகளையும் மேம்படுத்த இந்த வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கி நல்ல ஒரு வரவு செலவு திட்டத்தை பிரதமர் கொண்டுவந்துள்ளார் அதற்கு நன்றிகள் எனவும் அவர் தெரிவித்தார்