சமைக்காமல் பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – ஹரித்த அலுத்கே

download 1 19
download 1 19

சமைக்காமல் பச்சை மீன் உட்கொள்வது நல்லது என்று கூறி சிலர் தவறான செய்தியை அனுப்புகிறார்கள் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நன்கு சமைத்த மீன்களை உட்கொள்வதன் மூலம் கொரோனா தொற்று பரவாது என்று கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

மீன்களின் தோலில் உள்ள  பக்டிரீயா மற்றும் நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பைக் கடுமையாகச் சேதப்படுத்தும் என்று மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

மீன் உட்கொள்ள வேண்டுமானால் மீன்களைக் கழுவி, சுத்தம் செய்து, சமைக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.