வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைகின்றதா?கேள்வி எழுப்பும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

IMG 20201119 WA0002
IMG 20201119 WA0002

வரவு செலவுத் திட்டமானது ஏதாவது ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியகூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்


யாழ்ப்பாணத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர் குறித்த வரவு செலவு திட்டமானது இலங்கைக்கு எவ்வளவு தூரம் சாதகமாக உள்ளது என தெரியவில்லை கரணம்இந்த வரவு செலவு திட்டத்தில் 344100கோடி ரூபாக்கள் அடுத்த ஆண்டுக்கான செலவீனமாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நாட்டிற்கு கிடைக்க கூடிய வருமானமாக ஒருலச்சத்து எண்பத்து எட்டயிரத்து ஆறுநூறு கோடிரூபாக்கள் வரவுள்ளது ஆகவே செலவினத்திலும் விட வருமானம் மிக குறைவாக உள்ளது.


அப்படியானால் ஒரு லட்சத்து ஐநூறு கோடி ரூபாக்கள் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் அதை அரசாங்கம் வேறு ஒருவரிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை தற்போதைய பிரதமர் இந்தியாவிடம் கடன்களை மீள செலுத்த காலாவகாசத்தையும் கோரியிருந்ததாகவும் சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது