மேலும் 148 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 9
திரும்பினர் 9

கொரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 148 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்த 83 இலங்கையர்கள் நேற்றிரவு 11.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே -648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தோஹாவிலிருந்து ஒருவர் கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து 52 இலங்கையர்கள்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் – 607 என்ற விமானத்தில் அதிகாலை 3.25 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

அது மாத்தரமன்றி ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 12 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -455 என்ற விமானத்தில் அதிகாலை 3.37 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் அனைவரும் கொழும்பில் உள்ள நவலோகா தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களால் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை இராணுவத்தால் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.