அமைச்சர் ஜனக பண்டாரவிற்கு எதிராக வழக்கு அரசியல் பழிவாங்கல் – பிரமித பண்டார குற்றச்சாட்டு!

Pramitha Bandara Tennakoon 099
Pramitha Bandara Tennakoon 099

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிஅமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, முற்றிலும் அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிக்கின்றார்..

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவமொன்றுடன் தொடர்பில், அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த குற்றப் பத்திரிகை சட்டத்திற்கு முரணாணது எனவும், அதனால் அது செல்லுபடியாகாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகளினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.