சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இதுவரையில் 358 பேர் கைது!

a8e818a59aefa7b8634912ccba7de070 XL
a8e818a59aefa7b8634912ccba7de070 XL

சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றைய தினம் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 24 காவல்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும் விதம் தொடர்பில் சிவில் உடையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.