மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்-மருத பாண்டி இராமேஷ்வரன்

.jpg
.jpg

ஐம்பது ரூபாவைக் கூட பெற்று கொடுக்க முடியாத இவர்கள் ஆயிரம் ரூபா பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்தில் தான் மலையகத்தில் அபிவிருத்திகள் நடைபெற்றன.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருத பாண்டி இராமேஷ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆகிய உறுதிமொழிகள் வரவு – செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். எனினும், எதிர்க்கட்சிகள் ஆயிரம் ரூபா தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம் என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம், மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆகிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வரவேற்கின்றோம்.

மஹிந்த ஆட்சிகாலத்தில்தான் தோட்ட மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.