காவல்துறை மா அதிபர் பதவிக்கு விக்ரமரத்ன தெரிவு!

download 34
download 34

காவல்துறை மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற பேரவைக்கு பதில் காவல்துறை மா அதிபராக கடமையாற்றும் சி.டி. விக்ரமரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற பேரவை கூடும்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் நியமனம் முறைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து 33 வருடம் அனுபவம் கொண்ட சி.டி. விக்ரமரத்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து பூஜித் ஜயசுந்தர கடந்த மார்ச் மாதம் ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து பதில் காவல்துறை மா அதிபராகவே பதவி வகித்து வரும் சி.டி. விக்ரமரத்ன இதற்கு முன்னரும் 13 முறை அந்தப் பதவியை இடைக்காலங்களில் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.