கொரோனா தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கை!

news 11
news 11

கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

news 5 1
news 5 1

இதன் போது வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் சீராக அணியாத பணியாளர்கள், வீதியில் முகக்கவசமின்றி பயணித்தவர்கள், தரமற்ற முகக்கவசங்களை அணிந்திருந்தவர்கள் என பலரை சுகாதார பரிசோதகர்கள் இணங்கண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களை திரட்டியதுடன் குறித்த நபர்களை சுகாதார திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது.

news 3
news 3

இந்நிலையில் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்ட திகதியில் சில நபர்கள் மாத்திரமே சுகாதார திணைக்களத்திற்கு வருகை தந்திருந்திருந்தனர். வருகை தந்தவர்களுடன் சுகாதார பிரிவினர் கொரோனா தொற்று தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

news 4
news 4

சுகாதார நடைமுறைகளில் மீறி செயற்பட்டதுடன், சுகாதார பிரிவினரின் அழைப்பை மீறிய மிகுதி 20க்கும் மேற்பட்டவர்கள் இணங்காணப்பட்டு, அவர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளிலேயே ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

news 8 1
news 8 1

சுகாதார பிரிவினரின் இவ் அதிரடி நடவடிக்கையினால் வவுனியா மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

news 9
news 9