மன்னார் பகுதியில் ஒரு தொகுதி மஞ்சளுடன் இருவர் கைது!

92eb8fa0 51cd 446c bdb3 98e5d578f4b7
92eb8fa0 51cd 446c bdb3 98e5d578f4b7

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 721 கிலோ 500 கிராம் மஞ்சல் மூட்டைகள் மற்றும் 3 கிலோ 730 கிராம் கஞ்சா தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டின் பெயரில் மன்னார் சாயிட் சிட்டி பகுதியை சேர்ந்த இருவர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகும் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் காவல்துறையினர் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

c406bca7 ea60 4cd4 b923 2a82e34ab6b7
c406bca7 ea60 4cd4 b923 2a82e34ab6b7

மன்னார் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சாயிட் சிட்டி பகுதியில் இருந்து மன்னார் ஊழல் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைவாக கடற்படையுடன் இணைந்து குறித்த மஞ்சல் மற்றும் கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர காவல்துறை அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் உதவி காவல்துறை அத்தியட்சகர் காஸ்தூரி ஆராட்சியின் ஆலோசனையில் மன்னார் காவல்துறை பொறுப்பதிகாரி C.P.ஜயதிலகவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி காவல்துறை பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான காவல்துறை பிரிவினரே மேற்படி மஞ்சல் மற்றும் கஞ்சாவை கைப்பற்றி உள்ளனர்.

4e85014b ede6 4fa3 b4e7 fd2e0c9aef24
4e85014b ede6 4fa3 b4e7 fd2e0c9aef24

மேலும் மன்னார் சாயிட் சிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளானர்.

மேலதிக விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட மஞ்சல் மற்றும் சந்தேக நபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது