99 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

18 1434612393 srilanka parliament57 1
18 1434612393 srilanka parliament57 1

2021ம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி 2021ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாத நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் நடைபெறும்.

அதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறும்.