ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்; அரசு உறுதி!

Dinesh Gunawardena
Dinesh Gunawardena

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்காது, பெற்றுக்கொடுப்பதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தார். நிச்சயம் அதனைப் பெற்றுக்கொடுப்போம்” – என்றார்.