சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை தடுக்க சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானம்!

kerala prisons
kerala prisons

சிறைச்சாலைகளில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுதேசிய வைத்திய முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மருந்துக்கு தேவையான மூலப்பொருட்களை சிறைச்சாலை வளாகத்தில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதுவரையில் சிறைச்சாலைகளில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 578 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், ஏனைய 39 பேர் சிறைச்சாலை ஊழியர்கள் என சிறைச்சாலை ஆணையாளர்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.