கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா நோயாளிகள் அடையாளம்!

TM 20201004222716147413 4
TM 20201004222716147413 4

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(20) திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து உயிரிழந்தவருடைய மகள் வருகை தந்திருந்தார்.

அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று(21) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் கிளிநொச்சியில் கண்டாவளை பகுதியில் வீதி அபிவிருத்தி வேலைக்காக வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.