கொக்குவெளி வீதி காப்பற் இடும் பணிஆரம்பித்து வைப்பு.

IMG 20201122 WA0012 1
IMG 20201122 WA0012 1

வவுனியா அரசடி கொக்குவெளி பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணிகள் இன்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

Screenshot 20201122 134956

ஜனாதிபதியின் விசேட வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியாக ஒருலட்சம் கிலோமீற்றர் நீளமான வீதிகள் புனரமைப்பு பணிகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது

,
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 3 கிலோமீற்றர் நீளம் கொண்ட வவுனியா அரசடி கொக்குவெளி பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணிகள் பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கு.திலீபனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

IMG 20201122 WA0014


நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த குறித்த வீதி தி்ருத்தப்பணிக்களிற்காக 84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 20201122 WA0011


வீதி திருத்தப்பணிகளை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் வீதியின் அருகில் மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தார். 

ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.