பிரசாத் பெர்னாண்டோவின் கருத்தால் உருவானது “பிட்டின் பெருமை பேசும்” பாடல்

5555
5555

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என்று யாழ்ப்பாணம் தலைமையக காவற்துறை பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் அண்மையில் மன்றுரைத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த அதிகாரியின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் பிட்டின் பெருமையை குறிப்பிட்டு காவற்துறை அதிகாரியை கலாய்த்து வருகின்றனர்.

இதன்பின்னணியில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிட்டின் சுவையை, பெருமையை போற்றும் பாடல் ஒன்று இன்று (22) வெளியிடப்பட்டுள்ளது.

பூவன் மதீசன் என்பவரது இசையில் கே.எஸ் சாந்தகுமார் எழுதிய இந்த பாடலை பிரதீப் என்பவர் பாடியுள்ளார்.