மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி!

sri maha bodiya
sri maha bodiya

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (22.11.2020) இன்று முற்பகல் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

மறைந்த நாபான பேமசிறி நாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு தலதா மாளிகைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மறைந்த நாபான பேமசிறி தேரரரின் பூதவுடல் கண்டி-குண்டசாலை பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.