வர்த்தக நிலையத்துடன் இணைந்த வீட்டில் கொடி பறந்ததால் காவற்துறையினர் முற்றுகை

IMG 20201122 111934
IMG 20201122 111934

வவுனியாவில் வர்த்தக நிலையத்துடன் அமைந்த தனது வீட்டின் முன் அதன் உரிமையாளர் மாவீரர் வாரத்தை மஞ்சள் சிகப்பு கொடிகளை கட்டி அனுஷ்டித்த நிலையில் அதனை அகற்றுவதற்காக காவற்துறையினர் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 7.30 மணியளவில் குறித்த வர்த்தக திலையத்திற்கு சென்ற வவுனியா காவற்துறையினர் கொடிகளினை அகற்றுமாறு தெரிவித்ததுடன் மாவீரர் வாரம் அனுஷ்டிப்பு தொடர்பாக நீதிமன்றத்தின் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என தெரிவித்து குறித்த நபருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அவர் மறுப்பு தெரிவித்ததால் காவற்துறையினர் திரும்பி சென்றுள்ளனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபயணமின்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளை தனது வீட்டு வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்காக நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பதாக வர்த்தகர் தெரிவித்துள்ளார்